போர்ட்டிக்சன், செப்டம்பர் 18 – தனது மத மையத்தில் 19 வயது பயிற்சி ஆசிரியரைக் கற்பழித்தாக, உஸ்தாஸ் ஒருவர் மீது இன்று போர்டிக்சன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அதேவேளையில், அந்த மத மையத்தின் தலைவராவருமான 43 வயதான அந்த உஸ்தாஸ், ஒரு குழந்தையையும் உடல் ரீதியான பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சிரம்பான் நீதிமன்றத்தில் இரண்டாம் குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளார்.
இவ்வேளையில், 4,000 ரிங்கிட் ஜாமின் தொகையில் அந்த உஸ்தாசை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அக்டோபர் 17-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.