
புக்கிட் கட்டில், மார்ச்-23 – மலாக்கா புக்கிட் கட்டிலில் வாகனமோட்டும் போது ஓட்டுநர் கண்ணயர்ந்ததால் விபத்து ஏற்பட்டு 2 வயது பாலகன் பரிதாபமாக உயிரிழந்தான்.
நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு ஏற்பட்ட அவ்விபத்தில் மேலும் அறுவர் காயமடைந்தனர்.
31 வயது பெண்மணி ஓட்டிச் சென்ற Perodua Axia காரில் அவரின் 4 பிள்ளைகளும் பயணித்துள்ளனர்.
மற்ற 3 குழந்தைகளுக்கு முறையே 7, 4 மற்றும் 9 வயதாகும்.
மலாக்கா பட்டணத்திலிருந்து Tehel செல்லும் வழியில் ஒரு சில வினாடிகளுக்கு அவர் கண்ணயர்ந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்து, அவ்வழியே வந்த Perodua Myvi காருடன் மோதியது.
அதில் தலையில் படுகாயமடைந்த அவரின் 2 வயது மகன் மருத்துவமனையில் மரணமடைந்த வேளை, மற்ற 3 பிள்ளைகளுக்கு கால் எலும்பு முறிவும் இதர சிராய்ப்புக் காயங்களும் ஏற்பட்டன.
விபத்தில் சம்பந்தப்பட்ட 35 வயது Myvi காரோட்டுநருக்கும் அவரின் 45 வயது அண்ணனுக்கும் வயிற்றிலும் நெஞ்சிலும் காயங்கள் ஏற்பட்டதாக மலாக்கா தெங்கா போலீஸ் கூறியது.