
கோலாலம்பூர், ஜனவரி-16 போலீஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெற விரும்பினால், BMI எனப்படும் அவர்களின் சமச்சீரான உடல் பருமன் குறியீட்டு எண் 28-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் அதனைத் தெரிவித்துள்ளார்.
பதவி உயர்வுகளுக்கான நடைமுறை கடுமையாக இருப்பதை உறுதிசெய்ய, புதிதாகச் சேர்க்கப்பட்ட அளவுகோல்களில் இதுவும் ஒன்று என்றார் அவர்.
போலீஸ் அதிகாரிகளின் ஆரோக்கியம் மற்றும் திறன்களை உறுதி செய்வதற்கு இந்த முயற்சி முக்கியமானது;
இதனால் மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்த சேவைகளை வழங்குவதற்கான அவர்களின் திறன் அதிகரிக்குமென IGP நம்பிக்கைத் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற போலீஸ் படையின் மாதாந்திர ஒன்றுகூடலில் பேசிய போது அவர் அவ்வாறு சொன்னார்.