
கோலாலாம்பூர், மார்ச்-2-சரோஜா ஏகாம்பரம்…
38 ஆண்டுகள் சேவையிலிருந்து சூப்ரிடெண்டனாக ஓய்வுப் பெற்ற போலீஸ்காரர்… இன்று வழக்கறிஞர்.
சிறுவயது கனவை நனவாக்கி இன்று வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டும் உள்ளார்.
வெள்ளிக் கிழமையன்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் அவர் முறைப்படி வழக்கறிஞராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
அந்த மகிழ்ச்சியில், சட்டத் துறை மீதான ஆர்வம் குறித்து கருத்துரைத்த அவர்…
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், சொந்த மகளுக்குக் கீழே இவர் வழக்கறிஞர் பயிற்சியை மேற்கொண்டது தான்.
தானே விருப்பப்பட்டு அதனை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
போலீசாகப் பணியாற்றிய போதே சட்டக் கல்வியை மேற்கொள்ள அனைத்து வகையிலும் உதவிய போலீஸ் துறையையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இவ்வேளையில், தாய்க்குப் பயிற்சியளித்தது எதிர்பாராத ஒன்றென வருணித்த சரோஜாவின் மகள் யாஷ்னி பிரியா பாஸ்கரன், தாயைக் கண்டு பெருமையடைவதாக சொன்னார்.
சிறுவயது கனவை விடாமல் துரத்தி நனவாக்கிய சரோஜா, இன்று வழக்கறிஞராக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
மனஉறுதியும் அர்ப்பணிப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கான இவரும் ஒரு சான்று…



