
Meccaவில் Jalan Ajyadட்டில் ஹோட்டல் Mira Ajyadடில் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்த சுமார் 70 மலேசிய யாத்திரிகள் பாதுகாப்பாக இருப்பதோடு அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
மீரா அஜ்யாத் ஹோட்டலில் தங்கியிருந்த அனைத்து யாத்திரிகளும் உம்ரா பயண நிறுவனங்களான TH Travel, ஜஹாஃபிஸ் டிராவல் ( Zahafiz Travel) மற்றும் ரேஹார் டிராவல் ( Rayhar Travel) ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததாக விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தங்களது நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து மலேசிய யாத்திரிகளும் பாதுகாப்புடன் இருப்பதாக அந்த மூன்று நிறுவனங்களும் குறிப்பிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி இரவு மணி 7.20 அளவில் அந்த ஹோட்டல் வளாகத்தில் இருந்தாக அந்த மூன்று சுற்றுலா நிறுவனங்கள் உறுதிப்படுத்தின.
Jeddahவிலுள்ள மலேசிய தூதரக அலுவலகமும் நேற்றிரவு மணி 7.20 அளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மலேசிய யாத்திரிகள் பலர் அங்கு காணப்பட்டதாக குறிப்பிட்டது.
மலேசியா உட்பட தென் கிழக்காசியாவைச் சேர்ந்த யாத்திரிகள் தங்கக்கூடிய முக்கிய விடுதியாக Hotel Mira Ajyadட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த காணொளி சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.



