
ஜோகூர் பாரு, ஜனவரி-16-ஜோகூர் பாருவில் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு மனைவி மற்றும் 4 வயது மகனைக் கொலைச் செய்ததாக, 33 வயது மருத்துவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
மாவட்ட போலீஸ் அதனை உறுதிப்படுத்தியது.
ஒரு கணக்காய்வாளரான 36 வயது அம்மாதுவும், மகனும் பண்டார் டத்தோ ஓன்னில் உள்ள வீட்டில், கழுத்து மற்றும் முகத்தில் கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்தனர்.
சவப்பரிசோதனையில், மனைவி மூச்சுத்திணறி இறந்ததும், குழந்தை மூச்சு அடைக்கப்பட்டு உயிரிழந்ததும் உறுதிப்படுத்தப்பட்டன.
இரண்டிலுமே, குற்றச்செயல் அம்சங்கள் இருந்துள்ளன.
அதற்கு ஆதாரமாக போலீஸார் கத்தி மற்றும் தலையணையை பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஜனவரி 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டு 13 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட நிலையில், இன்று கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.



