Latestமலேசியா

மலாக்காவில் கைப்பந்தாட்டம் விளையாடி முடித்த 14 வயது மாணவன் மயங்கி விழுந்து மரணம்

 

மலாக்கா, மார்ச்-15 -மலாக்காவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் volleyball எனப்படும் கைப்பந்தாட்டத்திற்குப் பிறகு மயங்கி விழுந்து, 14 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

நேற்று காலை 10.30 மணிக்கு பள்ளித் திடலிலிருந்து சிற்றுண்டிச்சாலைக்கு நடந்து செல்லும் வழியில் அவன் மயங்கி விழுந்துள்ளான்.

பேச்சு மூச்சின்றி கிடந்த மாணவன் மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, CPR முதலுதவி சிகிச்சைகள் சுமார் 30 நிமிடங்களுக்கு வழங்கப்பட்டன.

எனினும் அது பலனளிக்கவில்லை; அவன் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

சவப்பரிசோதனை முடிவுகள் வரும் வரை, அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக, மலாக்கா தெங்கா போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!