மலாக்கா, அக்டோபர்-1 – மலாக்கா Ayer Keroh – Gapam சாலையில் p-hailing எனப்படும் உணவுகளை அனுப்பும் தொழில் செய்யும் மோட்டார் சைக்கிளோட்டி, TNB-யின் மின்னூட்டும் பெட்டியை (feeder pillar) மோதி உயிரிழந்தார்.
நேற்றிரவு 9 மணி வாக்கில் Gapamமிலிருந்து Ayer Kerohவுக்குச் செல்லும் வழியில், அவரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமுள்ள TNB-யின் மீன்னூட்டும் பெட்டியில் மோதியது.
இதனால் படுகாயமடைந்த 48 வயது Tan Tian Hau, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை, மலாக்கா தெங்கா போலீஸ் தலைவர் Christopher Patit தெரிவித்தார்.
சவப்பரிசோதனைக்காக, அவரின் உடல் மலாக்கா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.