
மலாக்கா, செப்டம்பர் 8 – செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் மலாக்கா ஜாலான் துன் பேராக் பகுதியில், போலீசார் மேற்கொண்ட சோதனையில் கார்கள், கைபேசிகள் மற்றும் போலி பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்தி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 19 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
முதல் சோதனையில் ஏழு இந்தோனேசியர்கள் குறைந்த விலையில் வாகனங்கள் மற்றும் கைப்பேசிகளை விற்பனை செய்வதாக கூறி மோசடி செய்ததை போலீசார் கண்டறிந்தனர்.
இரண்டாவது, மூன்றாவது சோதனைகளில் சீன குடிமக்களை இலக்கு வைத்து போலி பாலியல் சேவைகளை விளம்பரம் செய்த கும்பல் போலீசாரிடம் வசமாக சிக்கியது.
இச்சோதனைகளில் 550,000 ரிங்கிட் மதிப்பிலான எட்டு மடிக்கணினிகள், 21 கைபேசிகள், மூன்று சொகுசு கார்கள் மற்றும் நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அனைத்து சந்தேக நபர்களும் சுற்றுலாப் பயணிகளாக நுழைந்து பின்னர் கும்பலில் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.



