
நிபா (Nipah) வைரஸ் இல்லாத நாடாக மலேசியா உள்ளது என்பதை கால்நடை சேவைகள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் Nipah இல்லாத நிலையைப் பராமரிக்க, எப்போதும் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டு தொடர்புடைய நிறுவனங்களுடன் நெருக்கமாகச் செயல்படுகிறது என்று விலங்கு சுகாதாரம் மற்றும் விலங்குகளிலிருந்து பரவும் நோய்களுக்கு பொறுப்பான கால்நடைகள் சேவைத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக வளர்ப்புப் பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் மீது ஆண்டுதோறும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகின்றன.
2025 ஆம் ஆண்டில், 2000 க்கும் மேற்பட்ட வளர்ப்புப் பன்றிகளின் மாதிரிகள் மற்றும் 48 காட்டுப்பன்றி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோதிலும் இவற்றில் எதுவும் நிபா வைரஸ் அறிகுறிகள் காணப்படவில்லை.
இதனிடையே பழங்களை உடகொள்ளும் வௌவால்கள் நிபா வைரஸை இயற்கையாக பரப்பக்கூடிய பறவையாக திகழ்கின்றன என கால்நடை சேவைகள் துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பன்றி பண்ணைகள் மூலாமாகம் Nipah கிருமிகள் பரவுகின்றன.
பண்ணை உயிரியல் பாதுகாப்பு அணுகுமுறை பின்பற்றப்படாவிட்டால் நிபா கிருமித்தொற்று மனிதர்களுக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
பன்றிகளில் பரவும் நிபா கிருமிகளின் மருத்துவ அறிகுறிகளில் சுவாச பிரச்னை அறிகுறிகள், காய்ச்சல், சோம்பல், பசியின்மை, நடுக்கம் மற்றும் வலிப்பு போன்றவையும் அடங்கும்.



