மலேசியா வரவிருக்கும் சீனாவின் 2 புதிய பாண்டாக்கள்

கோலாலாம்பூர், நவம்பர் 18- சீனாவிலிருந்து இரண்டு புதிய பாண்டாக்களான சென் சிங் மற்றும் ஷியாவ் (Chen Xing and Xiao Yue) அடுத்த 10 ஆண்டுகளுக்கு Zoo Negara-வில் இருக்கவிருக்கின்றன.
அந்த 2 பாண்டாக்களும் இன்று மதியம் சீனாவிலிருந்து புறப்பட்டு , இன்றிரவே மலேசியாவை வந்தடையவுள்ளன.
.
2020 ஆம் ஆண்டு பிறந்த ஆண் பாண்டாவான சென் சிங் சுறுசுறுப்பானவன் என்றும் அவன் தண்ணீரில் விளையாட மிகவும் விரும்புவான் என்றும் கூறப்பட்டது.
அதே ஆண்டு பிறந்த ஷியாவ் யூ எனும் பெண் பாண்டா மிகவும் அமைதியான, மென்மையான குணம் கொண்டவள். அதே நேரத்தில் உணவை மிகவும் விரும்பி உண்பதால் அது சற்று குண்டாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்த பாண்டாக்களின் வருகை, மலேசியா மற்றும் சீன நாட்டு பாண்டா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
முன்னதாக 2014 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்ட பாண்டா ஜோடியை மலேசியா தனது செல்லப்பிராணிகளைப் போல நேசித்தது. அவை மூன்று குட்டிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
புதிய பாண்டாக்கள் முதலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, பின்னர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படும்.
Zoo Negaraவின் தகவலின்படி, புதிய பாண்டா ஜோடியின் வருகை பூங்காவிற்கு புதிய உத்வேகத்தை அளித்து, பார்வையாளர்களை மீண்டும் அதிக அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



