
கோலாலம்பூர், நவம்பர் -10 –,
கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள ஜாலான் புனுஸ் சாலையின் ஒரு பகுதி இன்று காலை
இடிந்து விழுந்தது. இதனால், அருகிலுள்ள பல சாலைகள் தற்காலிகமாக போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL மற்றும் போலிஸ் அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். பொதுமக்களும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மஸ்ஜிட் இந்தியா பகுதி வணிகம் மற்றும் சமுதாய நடவடிக்கைகளுக்கு முக்கியமான இடமாக இருப்பதால், இந்த சாலை மூடல் அப்பகுதி மக்கள் மற்றும் வணிகர்களுக்கு தற்காலிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, DBKL மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பழுது மற்றும் பாதுகாப்பு பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



