Latestமலேசியா

மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கிய சம்பவத்தில் தாயாரை இழந்த ஒரு ஆண்டு நினைவு நாளில் மகன் அஞ்சலி

கோலாலம்பூர், ஆக 25 –  கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கிய சம்பவத்தில் தனது தாயார் G. விஜயலட்சுமியை இழந்த ஒரு ஆண்டு நினைவு நாளில் அவரது மகன் M . சூர்யா சம்பவம் நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

கடைசிவரை தனது தாயாரின் உடலை பார்க்க முடியாமலேயே நாட்டிலிருந்து வெளியேறிய 25 வயதுடைய சூர்யா சம்பவம் நடந்த இடத்தில் அவரது தாயாரின் புகைப்படத்தை வைத்து , வாழை இலையில் தாயாருக்கு பிடித்த உணவுப் பொருட்கள் மற்றும் மலர்களை வைத்து அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தார்.

இந்த நிகழ்வில் மஸ்ஜித் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு உணவு மற்றும் பானங்களையும் அவர் வழங்கினார்.

இது தொடர்பான காணொளி பின்னர் சமூக ஊடகங்களில் வைரலானது.

அதோடு மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தை சேர்ந்த மக்களுக்கு அவர் உணவுப் பொருட்களையும் விநியோகித்தார்.

கடந்த ஆண்டு நடந்த இந்த துயரச் சம்பவத்தில், ஆந்திரப் பிரதேசத்தின் குப்பத்தைச் சேர்ந்த 48 வயதான விஜயலட்சுமி, 26 அடி அல்லது 8 மீட்டர் ஆழமான கால்வாயில் விழுந்தார்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தினமும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவரது உடலை மீட்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. விஜயலட்சுமியின் உடல் குறித்து எந்த தகவலும் கிடைக்காமலேயே தேடும் நடவடிக்கை ஆகஸ்ட் 31 ஆம்தேதி நிறுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!