Latestமலேசியா

மாணவர்களின் கவனத்தை ஈர்க்க ‘water gun’ ஐ பயன்படுத்திய விரிவுரையாளர்; வைரல் காணொளிக்கு குவியும் கருத்துகள்

கோலாலம்பூர், செப்டம்பர் 12 – மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவர் மாணவர்கள் வகுப்பில் கவனம் சிதறாமல் இருப்பதற்கு ‘water gun’ ஐ பயன்படுத்திய காணொளி வலைத்தளத்தில் வைரலாகி வெகுவான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

அப்பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மொழி கற்பித்தல் மாணவர் குழுவில், ‘மாடம் ஆமி’ (Madam Amie) என அழைக்கப்படும் அவ்விரிவுரையாளர், தனது வகுப்பில் மாணவர்களின் கவனத்தை கவரும் “பாடப்பயிற்சி கருவிகளில்” ஒன்றாக வாட்டர் கன்னைப் பயன்படுத்துகிறார் என்ற வாசகங்களோடு அக்காணொளி பதிவேற்றப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழத்தில் இணையும் புதிய மாணவர்கள், TESL (Teaching English as a Second Language) பாட முறையைத் தேர்வுச் செய்தால் நிச்சயமாக அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான கற்றல் அனுபவங்கள் கிடைக்கும் என்றும் பதிவிடப்பட்டது.

இந்நிலையில் அந்த காணொளிக்கு கீழ் பலரும் அந்த விரிவுரையாளரின் தனித்துவமான கற்பித்தல் முறையை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் பாட வேளையின் போது தூக்கமாக இருந்தால் அடிக்கடி கழிப்பறைக்கு சென்று முகம் கழுவி வர வேண்டிய அவசியம் இல்லை என்ற நகைச்சுவைமிக்க கருத்துக்களும் குவிந்த வண்ணமாக உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!