Latestமலேசியா

மாமன்னரிடமிருந்து டத்தோ பட்டம் பெற்றார் ஜோகூர் போலீஸ் தலைவர் எம்.குமார்

கோலாலம்பூர், செப்டம்பர்-7 – ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார் டத்தோ பட்டம் பெற்றுள்ளார்.

2024-ஆம் ஆண்டுக்கான கூட்டரசு அரசாங்கத்தின் கௌரவப் பட்டங்கள், மற்றும் விருதுகள் வழங்கப்படும் நிகழ்வில் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களிடமிருந்து, கமிஷ்னர் குமார் டத்தோ விருதைப் பெற்றுக் கொண்டார்.

மாநில போலீஸ் படைக்குத் தலைமையேற்ற குறுகிய காலத்திலேயே அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுபவராக உயர்ந்து நிற்பவர் டத்தோ குமார்.

குற்றச்செயல் துடைத்தொழிப்பில் அவர் காட்டி வரும் தீவிரமும் கண்டிப்பும் மாநில மக்கள் மத்தியிலும் அவரைப் பிரபலமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில், இன்றைய விருதளிப்பில் அரசாங்கத் தலைமைச் செயலாளர் Dato’ Sri Shamsul Azri bin Abu Bakar-ருக்கு Tan Sri விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இராணுவப் படையின் தளபதி Tan Sri Dato’ Seri Mohammad bin Ab. Rahman, தேசியப் போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin bin Husain @ Abd Rasid இருவரும் அதே Tan Sri பட்டத்தைக் கொண்டு வரும் P.M.N விருதுகளைப் பெற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!