
ஜோகூர், பத்து பஹாட், 23 -பள்ளி வகுப்பறையில் மாற்றுத் திறனாளி (OKU) மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 13 வயது மாணவன் பத்து பஹாட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட அந்த மாணவன் நீதிபதியின் முன்னிலையில் குற்றத்தை மறுத்துள்ளான்.
குற்றப்பத்திரிகையின்படி, கடந்த ஜனவரி 29 ஆம் தேதி இடைநிலைப் பள்ளி வகுப்பறையில் சக்கர நாற்காலியில் இருந்த 16 வயது மாணவியிடம் இந்த குற்றச்செயலை அம்மாணவன் புரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மேல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



