
டாமான்சாரா, பிப்ரவரி-22 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று அதிகாலை வீட்டில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுயநினைவற்ற நிலையில் இருந்த 65 வயது இஸ்மாயில் சாப்ரி, அதிகாலை 2.30 மணிக்கு கோத்தா டாமான்சாரா சன்வே மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டார்.
அவரின் உதவியாளர் Yuri Azhar Mazlan தனது facebook பக்கத்தில் அதனை உறுதிப்படுத்தினார்.
இஸ்மாயில் சாப்ரி மருத்துவனைக் கட்டிலில் ஓய்வெடுக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவேறியுள்ளார்.
தற்போதைக்கு அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
Bera நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி, 2021 முதல் 2022 வரை நாட்டின் 9-ஆவது பிரதமராகப் பதவியிலிருந்தார்.