Latestஉலகம்

மும்பை இரயில் நிலையத்தில் சண்டையின் போது கல்வீச்சு: அப்பாவி பயணிக்கு இடது கண் பார்வை இழப்பு

மும்பை இரயில் நிலையத்தில் சண்டையின் போது கல்வீச்சு: அப்பாவி பயணிக்கு இடது கண் பார்வை இழப்பு

மும்பை, பிப்ரவரி-8,

மும்பை புறநகர் இரயிலில் நிகழ்ந்த கல்வீச்சு சம்பவம், ஒரு பாவமும் அறியாத 28 வயது பயணிக்கு வாழ்நாள் முழுவதும் பார்வை இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு, அந்தேரி–தாதார் அதிவேக இரயிலில் பாந்த்ரா நிலையத்தில் 2 பயணிகள் இடையே சண்டை மூண்டது.

அவர்களில் ஒருவர் தடத்தில் குதித்து, எதிராளியை நோக்கி கல்லை எறிந்தார்.

ஆனால் அந்த கல் தவறி, வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆடவரின் இடது கண்ணில் பட்டு விட்டது.

இரயில்வே ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் அவ்வாடவரின் பார்வை இழப்பை உறுதிப்படுத்தினர்.

விசாரணையில் இறங்கியப் போலீஸார், CCTV காட்சிகள் மூலம் 26 வயது சந்தேக நபரை விரைந்து பிடித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!