![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-26-at-5.49.46-PM.jpeg)
புத்ராஜெயா, டிசம்பர்-26 – கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் தொடரும் வன்முறைகளில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.
வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிபடுத்தியுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் உள்ள மலேசிய உயர் ஆணையம், மொசாம்பிக்கில் உள்ள 20 மலேசியர்களுடன் தொடர்பு கொண்டதில், அவர்களில் எவரும் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியானது.
இருந்தாலும், அங்கு களநிலவரத்தை தொடந்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
இந்நிலையில், அவசியமோ அவசரமோ இல்லாத பட்சத்தில் மலேசியர்கள் யாரும் மொசாம்பிக் நாட்டுக்கு தற்போதைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாமென்றும் விஸ்மா புத்ரா அறிவுறுத்தியது.
தேர்தல் முடிவுகளை அடுத்து வெடித்த கலவரங்கள் வன்முறையாக மாறியதில், ஆகக் கடைசியாக மொசாம்பிக் தலைநகர் மாப்புத்தோவில் உள்ள சிறைச்சாலையிலிருந்து 1,500 கைதிகள் தப்பியோடினர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் 33 பேர் கொல்லப்பட்டு, 15 பேர் காயமடைந்தனர்.
அக்டோபரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் கட்சியே மீண்டும் வெற்றிப் பெற்றதாக திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் அறிவித்ததால், எதிர்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.