Latestமலேசியா

மோட்டார் சைக்கிளை ஓட்டி சோதனை செய்வதாக கூறி திருடிச் சென்ற ஆடவருக்கு ஓர் ஆண்டு சிறை ரி.ம 1,000 அபராதம்

பத்து பஹாட், ஜூலை 8 – மோட்டார் சைக்கிளை வாங்கப்போவதால் அதனை சோதனைக்கு ஓட்டிப்பார்ப்பதாக கூறி பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற லோரி உதவியாளரான ஆடவருக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

பத்து பஹாட் மாஜிஸ்திரேட் Arun Noval Dass முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 27 வயதான Mohamad Shahrul Khan Abdullah என்ற லோரி உதவியாளர் அதனை ஒப்புக் கொண்டார்.

ஜூலை 4 ஆம் தேதி காலை 9 மணியளவில் ஜாலான் Limau Kasturiயில் ஒரு ஆடவருக்கு சொந்தமான Yamaha Y15ZR வகை மோட்டார் சைக்கிளை Mohamad Shahrul திருடிச் சென்றாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டது.

தண்டனை சட்டத்தின் 379A பிரிவின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதற்கு முன் அதனை 15 நிமிடம் ஓட்டி பரிசோதனை செய்வதாக கேட்டுக் கொண்டதால் பாதிக்கப்பட்ட நபர் அவரிடம் மோட்டார் சைக்கிளை கொடுத்தார்.

எனினும் குறிப்பிட்ட நேரத்திற்குள் மோட்டார் சைக்கிளை Mohamad Shahrul ஒப்படைக்கத் தவறியதால் அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் அன்றைய தினமே Yong Peng சாலை சந்திப்புக்கு அருகே Mohamad Shahrul அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது அவரை போலீசார் கைது செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!