
கோத்தா பாரு, ஆகஸ்ட்-27 – கிளந்தான், கோத்தா பாருவில் இவ்வாண்டு SPM தேர்வெழுத வேண்டிய மாணவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை, கார் மோதித் தள்ளியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
நேற்றிரவு 7.40 மணியளவில் Pasar Melor சாலை சமிக்கை விளக்குச் சந்திப்பில் அவ்விபத்து நிகழ்ந்தது.
பச்சை விளக்கின் போது போய்க் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை, சிவப்பு விளக்கில் நிற்காமல் வேகத்தில் வந்த கார் மோதித் தள்ளிய dash cam காட்சிகள் வைரலாகியுள்ளன.
மரணமடைந்தவர் சமய இடைநிலைப் பள்ளி மாணவரான 17 வயது Azri Anuwar என அடையாளம் கூறப்பட்டது.
அவரின் உடல் சவப்பரிசோதனைக்காக குபாங் கெரியான் USM நிபுணத்துவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்க விரிவான விசாரணை வேண்டுமென மாணவனின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.