ரவாங், ஜனவரி-11, சிலாங்கூர், ரவாங், பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ் அருகேயுள்ள காட்டுப் பகுதியின் சாலையோரத்தில், கத்திக் குத்துக் காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2-ல் கண்டெடுக்கப்பட்ட அச்சடலத்தில் அடையாள ஆவணங்கள் எதுவுமில்லை.
எனினும் அவர் வெளிநாட்டவர் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் Noor Ariffin Mohamad Nasir கூறினார்.
25 முதல் 40 வயதுக்குள் இருக்கலாமென நம்பப்படும் அப்பெண், கண்டெக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே இறந்திருக்கக் கூடுமென அவர் சொன்னார்.
அப்பெண்ணின் கழுத்து, நெஞ்சு, முதுகு ஆகியவற்றில் கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததால், அவர் கொலைச் செய்யப்பட்டிருக்கலாமென போலீஸ் சந்தேகிக்கிறது.
சவப்பரிசோதனைக்காக சடலம் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.