Latestமலேசியா

லங்காவியில் கடந்தாண்டு மட்டும் 73 பேர் மீது ஜெல்லி மீன் தாக்குதல்

லங்காவி, நவம்பர்-21 – லங்காவி கரையோரப் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 102 ஜெல்லி மீன் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டுமே 73 பேர் பாதிக்கப்பட்டதாக லங்காவி மாவட்ட பொதுத் தற்காப்புப் படை கூறியது.

ஆக அதிகமாக, Pantai Chenang கடற்கரையில் 47 சம்பவங்களும், Pantai Tengah-வில் 17 சம்பவங்களும், MPP Pelangi-யில் 9 சம்பவங்களும் பதிவாகின.

எனினும் இவ்வாண்டு, ஜெல்லி மீன் தாக்குதல்கள் குறைந்துள்ளன; நவம்பர் 15 வரைக்குமான நிலவரப்படி 23 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.

அண்மையில் ரஷ்யாவைச் சேர்ந்த 2 வயது சிறுவன் பெட்டி ஜெல்லி மீன் (Box Jellyfish) எனும் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த ஜெல்லி மீன் கொட்டி உயிரிழந்த சம்பவமும் அதிலடங்கும்.

இந்த பெட்டி ஜெல்லி மீன்கள் இதற்கு முன்பு லங்காவியில் அரிதாகக் காணப்படுபவையாகும்; ஆனால் புயல் உள்ளிட்ட அண்மைய வானிலை மாற்றங்களால் தற்போது அவை படையெடுத்துள்ளன.

இதையடுத்து, கடற்கரைப் பகுதிகளில் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, ஆபத்தான ஜெல்லி மீன்கள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கும் நோட்டீஸ்களும் வைக்கப்பட்டுள்ளதாக அத்துறை கூறிற்று.

கடந்த சனிக்கிழமை Pantai Chenang கடற்கரையில் குளிக்கும் போது ஜெல்லி மீனால் கொட்டப்பட்ட Vladimir Lakubanets எனும் 2 வயது ரஷ்ய சிறுவன், 4 நாட்கள் உயிருக்குப் போராடி நேற்று முந்தினம் உயிரிழந்தான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!