Latestமலேசியா

லஞ்சம் பெற்ற குவாந்தான் நகராட்சி மன்ற ஊழியருக்கு RM 16,000 அபராதம்

குவாந்தான், டிசம்பர் 26 – குவாந்தான் நகராட்சி மன்றமான Majlis Bandaraya Kuantan-இல் உதவி பொறியாளராக பணிபுரிந்து வரும் 43 வயது ஆடவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இருமுறை லஞ்சம் பெற்றதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

இதன் காரணமாக, குவாந்தான் நீதிமன்றம் இன்று அவருக்கு 16,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. அபராதத்தை செலுத்த தவறினால் ஒவ்வொரு குற்றத்திற்கும் சுமார் ஆறு மாதம் சிறையில் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையையும் அறிவித்தது.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர், அவருக்கு மாத வருமானம் குறைவாக இருப்பதையும், அவர் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை பார்த்துக்கொள்வதையும் கருதி, தண்டனையை குறைப்பதற்கான கோரிக்கையை முன் வைத்திருந்தார். மேலும், சந்தேக நபர் தனது தவறை உணர்ந்து மீண்டும் இப்படிச் செய்யமாட்டேன் என தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

ஆனால், ஊழல் தடுப்பு தரப்பு, இந்த செயல் ஊழல் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தியது.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவலின்படி, அந்த ஆடவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இருமுறை ஒரே பெண்மணியிடமிருந்து மொத்தம் 2000 ரிங்கிட்டைப் பெற்றுள்ளார். அதிகாரத்தில் உள்ளவர்கள் தனது பணியுடன் தொடர்புடைய நபரிடமிருந்து லஞ்சம் பெறுவது சட்டத்திற்குப் புறம்பானது என்று நீதிமன்றம் இவ்வேளையில் வலியுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!