
கோலாலம்பூர், அக்டோபர்-29,
வணிக வகுப்பு பயணிகளுக்கு சிறப்பு கட்டண தள்ளுபடி வழங்கும் முதல் மற்றும் ஒரே விமான நிறுவனமாக Batik Air திகழ்கிறது.
பாத்திக் ஏர் (Batik Air) விமான நிறுவனம், விரைவு இரயில் இணைப்புச் சேவையான ERL-லுடன் இணைந்து, வர்த்தகப் பயணிகளுக்கான வசதியையும் அனுபவத்தையும் உயர்த்தும் புதிய ஒத்துழைப்பை அறிவித்துள்ளது.
அவ்வகையில், பாத்திக் ஏர் வணிக வகுப்புக்கான flexi டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு, KLIA Ekspres இரயில் பயணத்தில் 25% வரை தள்ளுபடி கிடைக்கும்.
அதோடு, KL Sentral-லிருந்து KLIA வரை வெறும் 28 நிமிடங்களில் செல்லும் வேகமான இணைப்பை இது வழங்குகிறது.

வணிக வகுப்பு பயணிகளுக்கு check-in சோதனையில் முன்னுரிமை, தாராளமான பயணப் பை அலவன்ஸ், ஓய்வறை வசதி, மற்றும் மறு முன்பதிவுக்கான தளர்வான வசதி ஆகிய சிறப்புச் சலுகைகளும் கிடைக்கும்.
தவிர, KL Sentral-லில் நகர check-in சேவை மூலம் பயணிகள் தங்கள் சுமைகளை ஒப்படைத்து விமான ஏறுவதற்கான நுழைவு அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் — இது நகரத்திலிருந்து விமான நிலையத்துக்கான பயணத்தை இன்னும் எளிதாக்குகிறது.
‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு’க்கு நாம் தயாராகி வரும் இந்நேரத்தில், இந்த ஒத்துழைப்பு வர்த்த மற்றும் சுற்றுலா பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தி, நம்பகமான மற்றும் சௌகரியமான பயணத்தை வழங்குகிறது.
தனது பயணிகளுக்கு முழுமையான உயர்தர பயண அனுபவத்தை வழங்கும் கடப்பாட்டை Batik Air மறுஉறுதிப்படுத்தியுள்ளது.



