வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் 9 மாதங்களில் 55 பேர் கைது

கோலாலம்பூர், நவம்பர்-13,
இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை, மொத்தம் 55 மலேசியர்கள் வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 50 பேர் ஆண்கள் மற்றும் 5 பேர் பெண்கள் ஆவர்.
இந்த கைது 16 நாடுகளில் நடந்துள்ளதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
ஆக அதிகமாக இந்தோனேசியாவில் 10 பேரும், சிங்கப்பூரில் 9 பேரும், கம்போடியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் 6 பேருமாக கைதாகினர்.
போதைப்பொருள் கும்பல்கள், வேலை தேடுபவர்கள், மாணவர்கள் மற்றும் வருமானம் குறைந்தவர்களையே பெரும்பாலும் குறிவைக்கின்றன.
பொய்யான வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மற்றும் இலவச பயண வாய்ப்புகள் மூலம் ஏமாற்றி, அவர்களை போதைப்பொருள் கடத்தலுக்கு அக்கும்பல்கள் பயன்படுத்துவதாக போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



