
கோலாலம்பூர் ஜன 6 – நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நடைமுறைகளை இனி உள்துறை அமைச்சு கவனிக்கும். எனினும், ஜனவரி 15 முதல் அமலுக்கு வரும் கொள்கை அளவிலான அந்த மாற்றம் தொடர்பில், முதலாளிகள், தொழில்துறையினர் , வெளிநாட்டு தொழிலாளர் சங்கங்கள் ஆகியவை கவலை கொள்ள வேண்டியதில்லை , உள்துறை அமைச்சர் Saifuddin Nasution தெரிவித்தார்.
இவ்வேளையில், மனிதவள அமைச்சு தொழிலாளர் கொள்கை அமலாக்கம், Kuota தகுதி நிர்ணயம், வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நாடுகளுடன் ஒத்துழைப்பை மேற்கொள்வது போன்ற விவகாரத்தில் கவனம் செலுத்துமென அவர் கூறினார்.
இதனிடையே, நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, இரு அமைச்சுகளும் வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு விண்ணப்பத்துக்கான நடைமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்த முடிவெடுத்திருப்பதாக அவர் கூறினார்.
அதன் வாயிலாக, நாட்டிற்கு, வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிப்பதற்கான நடைமுறைகள் 30 அல்லது அதற்கும் குறைவான நாட்களுக்குள் குறைக்கப்படுமென Saiifuddin தெரிவித்தார்.