Latestஉலகம்விளையாட்டு
வெள்ளத்தால் நிறுத்தப்பட்ட கராபோ கோப்பை போட்டி; செர்ரி ரெட் ரெக்கார்ட்ஸ் அரங்கில் சேதம்
லண்டன், செப்டம்பர் 24 – Newcastle United மற்றும் AFC Wimbledon இடையேயான கராபோ (Crabao) கோப்பையின் மூன்றாவது சுற்றுக் கால்பந்து போட்டி, நேற்று வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
லண்டனில் ஏற்பட்ட கனமழையால் விம்பிள்டனின் cherry red records அரங்கில் புதைகுழி ஏற்பட்டுச் சேதமடைந்ததைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காட்சிகள் அந்த அரங்கில் சுற்றிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒரு மூலையில் புதைகுழி ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
மற்றொரு காணொளியில், ப்லோ லேனில் (Plough Lane) என்ற மற்றொரு திடலிலும், பல குழிகள் விழுந்து ‘கோல்ஃப்’ மைதானம் போல் காட்சியளிக்கிறது.