
புத்ரா ஜெயா , டிச 3- பிரதமரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் அகின் ( Shamsul Iskandar Akin ) மற்றும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் அல்பர்ட் தேய் ( Albert Tei ) ஆகியோர் மீது தலா ஐந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவிருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC யின் தலைவர் அசாம் பாகி (Azam Baki ) தெரிவித்தார்.
அவர்கள் மீது நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திலும், வெள்ளிக்கிழமை ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்படவுள்ளது. லஞ்சம் பெற்றதாக Shamsul மீது குற்றஞ்சாட்டப்படும் அதே வேளையில் லஞ்சம் கொடுத்ததாக Albert Tei மீது குற்றஞ்சாட்டப்படும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Azam Baki கூறினார்.
சபா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகித்த நிதியை திரும்ப பெறுவதற்காக மலாக்கா பி.கே.ஆர் தலைவருமான Shamsul லுக்கு லஞ்சம் கொடுத்ததாக Albert Tei கூறிக்கொண்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். Albert Tei யின் குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்ட Sofia Rini Buyong என்ற பெண் மீது MACC விசாரணை மேற்கொண்டபோதிலும் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்படாது என Azam Baki விவரித்தார். அவர் அரசு தரப்பு சாட்சியதாக இருந்துவருவார்.
சபா சுரங்க ஊழலில் முக்கிய நபராக இருந்துவரும் ஒரு வர்த்தகரான Albert Tei லஞ்சம் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். சபா அரசியல்வாதிகளுக்கு அனுப்பப்பட்ட நிதியை மீட்டெடுக்க முடியும் என்ற உறுதிமொழியின் கீழ், Shamsul லுடன் தொடர்புடைய சொத்துக்களை புதுப்பித்தல் உட்பட அவருக்காக 629,000 ரிங்கிட் செலவிட்டதாக கடந்த மாதம்
Albert Tei கூறிக்கொண்டார். மேலும், Shamsul வெளிநாடு செல்வதற்கு முன்பு தன்னிடம் வெளிநாட்டு நாணயம் கோரியதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.



