
ஷா ஆலாம், ஜூலை-6,
ஷா ஆலாம் செக்ஷன் 27, 28 வட்டாரங்களில் சிறுவன்களை ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்தியது உள்ளிட்ட ஆபாச சேட்டைகள் தொடர்பில், ஒரு பாகிஸ்தானிய ஆடவன் தேடப்படுகிறான்.
கடந்த ஏப்ரல் முதல் நடந்த சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக 4 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக, ஷா ஆலாம் போலீஸ் தலைவர் மொஹமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதையடுத்து 2017 சிறார் பாலியல் வன்கொடுமை சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் 4 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.
சிறுவன்களை அணுகி உதவிக்கேட்பது போல் கேட்டு, யாருமில்லா இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை ஓரினப் புணர்ச்சிக்கு அவன் உட்படுத்தி வந்துள்ளான்.
25 வயது மதிக்கத்தக்க அவ்வாடவன் கடைசியாக ஷா ஆலாம், செக்ஷன் 27, தாமான் பூங்கா நெகாரா அடுக்குமாடி குடியிருப்பை முகவரியாகக் கொண்டிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து தேடப்படுவோர் பட்டியலில் அவன் சேர்க்கப்பட்டுள்ளான்.