
புத்ராஜெயா, மார்ச்-9- சும்பாங்கான் துனாய் ரஹ்மா அல்லது STR ரொக்க உதவியின் இவ்வாண்டுக்கான இரண்டாம் கட்டன் தொகை, ஏப்ரலுக்கு பதிலாக நாளை முதல் முன்கூட்டியே வழங்கப்படுகிறது.
நோன்புப் பெருநாளுக்குத் தயாராகும் மக்களுக்கு உதவுவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது, B40 மற்றும் M40 குடும்பங்களின் நிதிச் சுமையை குறைக்க உதவும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தகுதிப் பெற்ற பெறுநர்களின் வங்கி கணக்குகளில் இந்த உதவி நேரடியாக செலுத்தப்படும்.
வங்கி கணக்கு இல்லாதவர்கள் பேங்க் சிம்பானான் நேஷனல் அல்லது BSN கிளைகளில் பணமாக பெற்றுக்கொள்ளலாம்.
1.3 பில்லியன் ரிங்கிட் நிதியை உட்படுத்திய இவ்வுதவித் திட்டம் நாடு முழுவதும் 5 மில்லியன் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
குடும்பங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோருக்கு தகுதி அடிப்படையில் தொகை மாறுபடும்.



