
உலு கிள்ளான், மார்ச்-20-நோன்புப் பெருநாளை முன்னிட்டு தேசிய மிருகக்காட்சி சாலையான Zoo Negara, சிறப்பு கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.
குடும்பங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஒரு சிறந்த வாய்ப்பாக, ஹரி ராயாவுக்கும் Zoo Negara வழக்கம்போல் திறந்திருக்கும்.
அவ்வகையில், குழந்தைகளுக்கான walk-in டிக்கெட்டுகளில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்குகிறது.
இச்சலுகை… ஹரி ராயா முதல் நாள் தொடங்கி 14-ஆம் நாள் வரை செல்லுபடியாகும்.
எனினும், 3 முதல் 12 வயதுடைய மலேசிய குழந்தைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
மேலும், நுழைவிடத்தில் MyKid அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற அடையாள ஆவணங்களை காட்ட வேண்டும்.
டிக்கெட்டுகள் walk-in முறையில் வாங்கப்பட வேண்டும்… அதோடு அதே நாளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவாக வருபவர்களுக்கோ, நடப்பிலுள்ள கட்டண பேக்கேஜ்களுக்கோ இச்சலுகை கிடையாது.
இந்த முயற்சியின் மூலம், குடும்பங்கள் ஒன்றாக நேரத்தைச் செலவிட்டு… விலங்குகள் மற்றும் இயற்கையைப் பற்றி அறிந்து கொள்ள Zoo Negara ஊக்குவிக்கிறது.
எனவே, ஹரி ராயா விடுமுறையில் சொந்த ஊர்களுக்குத் திரும்பாத குடும்பங்கள், குழந்தைகளுடன் Zoo Negara சென்று வரலாமே…



