Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

ஃபெராரியில் புதிய அத்தியாயம் தொடக்கம்; நெகிழும் லூயிஸ் ஹெமில்டன்

மிலான், ஜனவரி-23, F1 கார் பந்தயத்தின் 7 முறை உலக வெற்றியாளரான லூயிஸ் ஹெமில்டன் (Lewis Hamilton) தனது புதிய அணியான ஃபெராரியின் காரை முதன் முறையாக ஓட்டிப் பார்த்துள்ளார்.

முன்னதாக இத்தாலி, மிலான் நகரில் உள்ள ஃபெராரி தளத்தில், 40 வயது ஹெமில்டன் தனது முதல் நாளைத் தொடங்கினார்.

உயரதிகாரிகளையும் பணியாளர்களையும் சந்தித்தவர், வெளியில் காத்திருந்த இரசிகர்களையும் ஏமாற்றவில்லை.

புதிய அணியில் தமக்குக் கிடைத்துள்ள மகத்தான வரவேற்பு குறித்து நெகிழ்ச்சித் தெரிவித்த அந்த முன்னாள் மெர்சிடிஸ் ஓட்டுநர், F1 உலகில் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகச் சொன்னார்.

செந்நிற ஃபெராரி காரில் பந்தயத்தில் இறங்குவது எனது நீண்ட நாள் கனவாகும்; அது இப்போது நிறைவேறியுள்ளது என் வாழ்நாளின் மிகச் சிறந்த தருணம் என ஹெமில்டன் வருணித்தார்.

வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி ஃபெராரியின் புதியப் பந்தயக் கார் அறிமுகமாகவிருக்கும் நிலையில், 2023-ஆம் பருவத்தில் பயன்படுத்தப்பட்ட காரில், இவ்வாரக் கடைசியில் Fiorano பந்தயத் தளத்தில் அவர் சோதனையோட்டம் மேற்கொள்கிறார்.

பிரிட்டனைச் சேர்ந்த ஹெமில்டன் இப்புதியப் பருவத்தில் Charles Lecrec-க்குடன் இணைந்து ஃபெராரியைப் பிரதிநிதிப்பார்.

ஆஸ்திரேலியா, மெல்பர்னில் மார்ச் 14 முதல் 16 வரை நடைபெறும் பருவத்தின் முதல் பந்தயத்தின் போது அனைவரின் கண்களும் ஹெமில்டன் பக்கமே இருக்கும் என்றால் அது மிகையில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!