
கோலாலம்பூர், மே-22 – தலைநகரில் அங்காடி வியாபாரிகள் ஒழுங்குமுறையோடும் சட்டப்பூர்வமாகவும் செயல்பட வாய்ப்பு வழங்கும் வகையில், Pemutihan Penjaja திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தாஃபாவின் உத்தரவின் படி இத்திட்டம் செயலாக்கம் காண்கிறது.
வாகனங்களில் அல்லாமல் நகரும் அங்காடி வியாபாரிகள், தற்காலிக அங்காடி வியாபாரிகள் என 2 முதன்மைப் பிரிவுகளை அது கொண்டுள்ளது.
அவ்வகையில், முதல் பிரிவு வியாபாரிகளுக்கு பொட்டலமிடப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் விற்றல், சாரையோரங்களில் பூ விற்றல், சிறார் விளையாட்டு சாமாங்களை விற்றல் போன்றவற்றுக்கு, நடப்புத் திட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்படும்.
அதே சமயம், ஒரே இடத்தில் பெட்டிக் கடை வைத்தோ அல்லது சாலையோரக் கட்டங்களிலோ வியாபாரம் செய்யும் அங்காடி வியாபாரிகளுக்கு, கோலாலம்பூர் மேயர் நிர்ணயித்த விற்பனை நேரத்திற்கு ஏற்ப உரிமம் வழங்கப்படும்.
ஆனால் பொட்டலமிடப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை மட்டுமே அவர்கள் விற்க முடியும்; அவர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நேர உரிமம் அல்லது சாலையோர அங்காடிக் கடை உரிமம் வழங்கப்படும் என DBKL தெளிவுப்படுத்தியது.
இந்த தற்காலிக அங்காடி வியாபார உரிமத்துக்கு ஜூன் 1 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகுமென DBKL கூறியது.
விண்ணப்ப விஷயத்தில் மூன்றாம் தரப்புகளை நம்பி ஏமாற வேண்டாமெனவும் விபாயாரிகள் நினைவுறுத்தப்படுகின்றனர்.