Latest

அங்காராவில் Ataturk நினைவிடத்தில் அஞ்சலி தூதரக மரியாதை மட்டுமே என அன்வார் விளக்கம்

அங்காரா, ஜனவரி-9,
துருக்கியே நாட்டுக்கான பணிநிமித்தப் பயணத்தின் போது, அங்காராவில் உள்ள துருக்கிய குடியரசின் நிறுவனர் Mustafa Kemal Ataturk நினைவிடத்தில் தாம் மலர் அஞ்சலி செலுத்தியது சர்சையாகியுள்ள நிலையில்,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,
இது தூதரக மரியாதை மட்டுமே எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
Ataturk மேற்கொண்ட மதச்சார்பற்ற மாற்றங்கள் குறித்து  தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரது வரலாற்றுப் பங்கை மறுக்க முடியாது என்றார் அவர்.
“இது, அன்வார் என்றில்லை.. துன் Dr மகாதீர் மொஹட், டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் என யாராக இருந்தாலும் இதே மரியாதையைச் செய்ய வேண்டுமென்பது துருக்கியே நாட்டின் நடைமுறை என அன்வார் சுட்டிக் காட்டினார்.
முதலாம் உலகப் போருக்குப் பிறகு துருக்கியை வெளிநாட்டு தலையீட்டிலிருந்து வெற்றிகரமாகப் பாதுகாத்து குடியரசின் அடித்தளத்தை அமைத்த ஒரு தேசிய வீரராக Ataturk கொண்டாடப்பட்டாலும், அவர் எதிர்ப்பை அடக்குவதற்கும் அதிகாரத்தை மையப்படுத்துவதற்கும் விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.
அப்படிப்பட்டவருக்கு அன்வார் ஏன் மரியாதை செய்ய வேண்டுமென முன்னதாக உள்ளூர் சமூக வலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!