Latestமலேசியா

அசான் தொழுகைக்கு அழைக்கும் ஒலி மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு எதிர்ப்பு: அம்பாங்கில் 46 வயது நபர் கைது

அம்பாங், ஏப்ரல்-27-அம்பாங், தாமான் செராயாவில் சூராவ் ஒன்றில் அசான் தொழுகைக்கு அழைக்கும் ஒலி எழுப்பவும், வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த 46 வயது உள்ளூர் ஆடவர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்தனர்.

சம்பந்தப்பட்ட நபர் அந்த சூராவ்வின் வெளிப்புறப் பயன்பாடு மற்றும் சமயச் சடங்குகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது சிலாங்கூர் சுல்தானின் அதிகாரப்பூர்வ உத்தரவை அவமதிக்கும் செயலாகக் கருதப்படுவதால், பொது மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைதுச் செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு மடிக்கணினி, கைபேசி மற்றும் சில ஆவணங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்னதாக, அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க சிறப்பு கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் கூறியிருந்தது.

இச்சம்பவம் தேச நிந்தனைச் சட்டம் மற்றும் தொடர்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சமூக வலைத் தளங்களில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என போலீஸார் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!