
கோலாலம்பூர், பிப்ரவரி 25 – மலேசிய வானிலை ஆய்வு துறையான MetMalaysia, தீபகற்ப மலேசியாவின் ஏழு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து அதிக வெப்ப நிலை நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெட்மலேசியா வெளியிட்ட தகவலின்படி, பெர்லிஸ், கெடா மாநிலத்தின் குபாங் பாசு, பாடாங் தெராப், போக்கோக் செனா, சிக், பாலிங் மற்றும் பண்டார் பாரு (Kubang Pasu, Padang Terap, Pokok Sena, Sik, Baling dan Bandar Baharu) மாவட்டங்கள் இந்த எச்சரிக்கைக்குள் உள்ளடங்குகின்றன.
இந்த பகுதிகளில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து குறைந்தது மூன்று நாட்கள் 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பத்தால் உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் போதுமான தண்ணீர் அருந்தி, வெளிப்புற செயல்பாடுகளை குறைத்து, உடல்நலத்தை பாதுகாக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



