
கோலாலம்பூர், மார்ச் -10-மத்திய கிழக்கு மோதல்கள் இறக்குமதியைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கத் தேவையில்லை. குறிப்பாக எதிர்வரும் நோன்பு பெருநாள் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் போதுமானதாக உள்ளது என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக எந்தவொரு நாடும் ஏற்றுமதியை நிறுத்தினால், அரசாங்கம் மாற்று விநியோக வசதிகளை அடையாளம் காணும் என்று அவர் கூறினார்.
பண்டிகைக் காலத்திற்கு அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் போதுமானதாக இருப்பதால், கவலைப்பட வேண்டாம், பீதியடைந்து பொருட்களை வாங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புவதாக இன்று செய்தியாளர் கூட்டத்தில் அர்மிசன் குறிப்பிட்டார்.
மஞ்சள் வெங்காயம், சிவப்பு வெங்காயம், சிவப்பு மிளகாய், பயிற்றங் காய் , மற்றும் தேங்காய்ப் பால் உப்பட 27 அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டை அரசாங்கம் பண்டிகைக் காலத்தில் அமல்படுத்தும் என்று ஆர்மிசான் கூறினார். இந்த ஆண்டு பருப்பு கூடுதல் பொருளாக சேர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.



