Latestமலேசியா

அத்துமீறி தண்டவாளத்தில் நுழைந்த மூன்று வெளிநாட்டினர் கைது

ஷா அலாம், மார்ச் 13-சுபாங் ஜெயா– பத்து தீகா ரயில் தண்டவாள வழித்தடத்தில் நேற்று அத்துமீறி நுழைந்து வெட்டும் கருவியைப் பயன்படுத்தி கேபிள்களை வெட்டியதாக சந்தேகத்தின் பேரில் மூன்று வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

நள்ளிரவு மணி 12.45 அளவில் நடந்த சம்பவத்தில், சுபாங் ஜெயா–பத்து தீகா ரயில் தண்டவாள வழித்தடத்தில் 17.888 கிலோமீட்டரில் இல் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பது குறித்து KTMB குற்றச் செயல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த துணை போலீசிற்கு தகவல் கிடத்ததாக மலேயன் ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தண்டவாளத்தில் ஓடுபாதையில் அத்துமீறி நுழைந்து, வெட்டும் கருவிகளைப் பயன்படுத்தி கேபிள்களை வெட்டிக் கொண்டிருந்த அந்த மூன்று ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்த வெட்டும் கருவிகள், மூன்று கை தொலைபேசிகள் , இரண்டு மோட்டார் சைக்கிள் சாவிகள் மற்றும் ஒரு பணப்பை ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேக நபர் மேல் நடவடிக்கைக்காக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ரோந்துப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!