
கோலாலம்பூர், மார்ச்-30-அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான இணைய விவாதங்களில் பதிவான கருத்துகளில் சுமார் 70% கருத்துகள் AI அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன் அதனை அம்பலப்படுத்தியுள்ளார்.
“வாரத்தில் முதல் வேலை நாளான திங்கட்கிழமை காலை 11 மணிக்கு சமூக ஊடகத்தில் இட்ட ஒரு பதிவுக்கு, ஒரு மணி நேரத்தில் 10,000 likes-களு,ம், 800 கருத்துகளும் வருகின்றன. இதிலிருந்தே தெரியவில்லையா,”என்றார் அவர்.
இப்படி போலி கணக்குகளிலிருந்து தகாத கருத்துகளைப் பதிவிட்டு, இன-மத மோதல்களைத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பதே அவர்களின் வேலை.
இந்த விவகாரம் சிவில் பிரச்சனை மட்டுமே; ஆனால் சிலர் இதை அரசியல் ஆயுதமாக்கி, இன, மத உணர்வுகளை தூண்ட முயற்சிக்கின்றனர்.
இந்த AI கருத்துகளே இதற்கு தக்கச் சான்று என்றார் அவர்.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நில உரிமையாளர் இடையேயான சட்டப்பூர்வ பிரச்சனையாகவே இதை நாம் பார்க்க வேண்டும்; இன, மத, அரசியல் கோணத்தில் அணுகக் கூடாது என யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.
‘மலேசியாவில் இனவாதம் 2025’ என்ற Pusat Komas-சின் அறிக்கையை இன்று கோலாலாம்பூரில் அறிமுகப்படுத்திய நிகழ்வில் துணையமைச்சர் அவ்வாறு பேசினார்.



