
கோலாலம்பூர், ஜனவரி-18-8 ஆண்டுகளுக்கு முன் BBC நேரலை பேட்டியில் செய்தியாளரான தந்தையை இடைமறித்து உலகம் முழுவதும் வைரலான Marion மற்றும் James ஆகிய சிறு குழந்தைகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
இப்போது இருவரும் மீண்டும் வைரலாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர்.
அன்று நேரலையில் கலாட்டா செய்த குழந்தைகள், புதிய வீடியோவில் பதின்ம வயது பிள்ளைகளாக வளர்ந்து பார்வையாளர்களை மீண்டும் கவர்ந்துள்ளனர்.
தந்தையின் மடியில் இருவரும் அமர்ந்துகொண்டு pose கொடுப்பது, 2017‑ல் நடந்த அந்த நகைச்சுவையான தருணத்தை மீண்டும் நினைவூட்டி, குடும்பத்தின் இயல்பான பாசத்தை வெளிப்படுத்துகிறது.



