ஷா அலாம், நவ 29 – தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்குமிடையே நடைபெற்ற சந்திப்பு இரண்டு பழைய நண்பர்களுக்கு இடையிலான சாதாரண விவாதம் மட்டுமே என்று பெர்சாத்து துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெளிவுபடுத்தினார்.
இந்த சந்திப்பு தேசிய முன்னணி புதிய அரசாங்கத்தை அமைக்க வற்புறுத்துவதற்கான முயற்சி என்று ஸாஹிட் கூறியதற்கு பதில் அளித்த அவர் , சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தன்னிடம் இது ஒரு நட்பு ரீதியிலான ஆலோசனை என்று கூறியதாகவும், புதிய அரசாங்கத்திற்கான முறையான முன்மொழிவு அல்ல என்றும் தெரிவித்தார்.
எனினும் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை ஹம்சா வெளியிடவில்லை. ஸாஹிட்டை சந்தித்த நபரிடம் இது குறித்து தாம் கேட்டபோது அந்த சந்திப்பு தீவிரமான விவாதம் அல்ல, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சாதாரண சந்திப்பு அதுவாகும் என கூறியதாக ஹம்சா சுட்டிக்காட்டினார். .
நண்பர்களாக, அவர்கள் நன்மை பயக்கும் யோசனைகளை பரிந்துரைப்பது இயல்பானது. இது பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்து பேசுவது மற்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது போன்றது என்பதால் அதில் என்ன தவறு என ஹம்சா வினவினார்.
கூட்டணி தலைவருக்கு பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு உட்பட, ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு தேசிய முன்னணியை நம்ப வைக்கும் முயற்சிகள் நடந்ததாக ஸாஹிட் கூறியிருந்தார்.