Latestமலேசியா

நச்சுத்தன்மை உணவு உட்கொண்ட சந்தேகம் தாயும் 9 வயது மகனும் மரணம்

புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 13 – சனிக்கிழமை தவாவில் நடந்த திருமண விருந்தில் கலந்து கொண்ட பின்னர், நச்சுத்தன்மை கொண்ட உணவினால் தாயும் அவரது 9 வயது மகனும் இறந்ததாக நம்பப்படுகிறது.

காலை 11 மணியளவில் விருந்தில் கலந்துகொண்டபின் வீடு வந்து சேர்ந்த சில மணி நேரத்தில் கடுமையாக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கினால் தனது மனைவியான 36 வயது நசுவா பிலியும் ( Nazuah Pili )யும், மூத்த மகன் முகமட் அம்ரான் ஆகிய இருவரும் பாதிக்கப்பட்டதாக மஸ்ரான் முகமட் அமின் கூறினார்.

எனினும் இதர இரண்டு பிள்ளைகளான ஆறு வயது Naziah Insyirah மற்றும் 18 மாத குழந்தை முகமட் அஸ்ரான் ஆகியோரை குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக அருகேயுள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றதால் அவ்விருவரும் உயிர் தப்பியதாக 43 வயதுடைய மஸ்ரான் தெரிவித்தார்.

சவ பரிசோதனைக்குப் பின் Nazuah மற்றும் முகமட் அம்ரான் ஆகியோரின் உடல்கள் இரவு 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து புகார் கிடைத்திருப்பதை தாவாவ் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Chamin Piuh உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!