ஷா அலாம், டிச 9 – மாசஜ் செய்துகொண்டிருந்தபோது சோதனையில் துண்டு மட்டும் அணிந்திருந்த உள்ளூர் ராப் கலைஞர் ஒருவரை சுபாங் ஜெயா நகரான்மைக் கழக அமலாக்க அதிகாரி பதிவு செய்தாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் இங் சு லிம் ( Ng Suee Lim ) மன்னிப்புக் கோரியுள்ளார்.
அந்த கலைஞருக்கும் அமலாக்க அதிகாரிக்கும் இடையே தவறான புரிதல் இருந்திருக்கலாம் என்று ஊராட்சி மன்றம் மற்றும் சுற்றுலா துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினருமான இங் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தை இரு தரப்பினரும் சுமுகமாக தீர்த்துக் கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்கு தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இன்றுவரை, அமலாக்க அதிகாரிகள் சட்டவிரோதமான இடங்களில் மேற்கொள்ளும் சோனையின்போது எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான சீரான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை எதுவும் எங்களிடம் இல்லையென அவர் கூறினார்.
எனினும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று இங் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இவ்வாறான நடடிக்கையின்போது உடையில் கமராக்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஆலோசனையை பரிசீலிப்பதாகவும், ஆனால் முதலில் அனைத்து ஊராட்சி மன்றங்களுடனும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
SS 14 இல் மாசாஜ் நடவடிக்கையை மேற்கொண்டபோது உடைகள் அணிந்திருந்தாத நிலையில் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் அமலாக்க அதிகாரி ஒருவர் தம்மை ரகசியமாக பதிவு செய்ததாக ரெப் இசை கலைஞரான Sharifah Zamaera Al Edros Syed Zafilen வியாழக்கிழமையன்று கூறியிருந்தார்.