Latestமலேசியா

அமெரிக்காவின் வரிவிதிப்பு மலேசியர்கள் மீதான தாக்கம் எனும் கலந்தாய்வில் கலந்துகொண்டு, உலக மாற்றத்தினால் நமக்கான பாதிப்பை அறியுங்கள்!

கோலாலம்பூர், ஏப் 16 – அமெரிக்காவின் வரி விதிப்பு ;மலேசியர்கள் மீதான தாக்கம் என்ற தலைப்பிலான ஆய்வரங்கம் ஒன்று MIET எனப்படும் ஒன்றிணைந்த மலேசியர்களுக்கான பொருளாதார உருமாற்ற சங்கத்தின் ஏற்பாட்டில்
எதிர்வரும் சனிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதி காலை 8.30 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் ஆசிய கல்லூரியின் PJ வளாகத்தில் நடைபெறவுள்ளதாக இச்சங்கத்தின் தலைவரும் பொருளாதார வல்லுனருமான மனோகரன் மொட்டையன் தெரிவித்துள்ளார்.

வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனரும் இச்சங்கத்தின் செயலாளருமான தியாகராஜன் முத்துசாமி இந்த ஆய்வரங்கின் நெறியாளராக செயல்படவிருக்கிறார்.

கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ,உலகளாவிய வர்தக ஆய்வாளருமான சார்லஸ் சன்டியாகோ (Charles Santiago) , பொருளாதார மற்றும் கொள்கை ஆலோசகரான டாக்டர் கோபி (Dr Gopi), அலெயன்ஸ் பேங்க்கின் (Alliance Bank) முன்னாள் தலைமை பொருளாதார அதிகாரி மனோகரன் மொட்டையன் (Manokaran Mottain) , கோலாலம்பூர் சிலாங்கூர் வர்த்தக தொழில் சம்மேளமான KLSICCI தலைவர் நிவாஸ் ராகவன் (Nivas Ragvan) ஆகியோர் இந்த ஆய்வரங்கில் முக்கிய தலைப்புகளில் உரையாற்றவுள்ளனர்.

வர்த்தக தலைவர்கள், தொழில் முனைவர்கள் ,கொள்கை வரைவோர் ,பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள்,மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தக ஆலோசகர்கள் மற்றும் மலேசிய பொருளாதாரத்தின் மீது ஆர்வமுள்ளவர்கள் இந்த ஆய்வரங்கத்தில் கலந்துகொண்டு பயன் அடையலாம்.

நீடித்த மற்றும் முழுமையான ஆலோசனை மன்றமான SICC, கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்தியர் வாணிக மற்றும் தொழில் சம்மேளனமான ( KLSICCI ) , தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், NLFC மற்றும் பிரிக்பீல்ட்ஸ் ஆசிய கல்லூரி ஆகியவை இந்த ஆய்வரங்கின் ஆதரவாளராக செயல்படுகின்றன.

குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே பதிவு செய்து பயன்பெற அழைக்கப்படுகிறார்கள். நுழைவு இலவசம்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!