
வாஷிங்டன், ஜூலை 9 – அமெரிக்காவில், விமானங்களில் நுழைவதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் பரிசோதனை நடவடிக்கையின் போது, பயணிகள் தங்களின் காலணிகளை அகற்றி காட்ட வேண்டிய அவசியம் இல்லை எனும் புதிய கொள்கையை நேற்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
காலணிகளில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இந்தக் கொள்கை கடந்த 20 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் வியக்கத்தக்க முறையில் பன்மடங்கு முன்னேற்றங்களை கண்டுவிட்டதால், காலணிகளை அகற்றி பரிசோதிக்கும் பழைய கொள்கைகளை அரசு இரத்து செய்துள்ளது.
அமெரிக்க வரலாற்றில் நியூயோர்க் தாக்குதல்களைப் போன்ற சம்பவங்களைத் தடுக்கும் விதத்தில் காலணிகள் பரிசோதனையைப் தவிர்த்து பைகளிலிருந்து மடிக்கணினிகளை அகற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.