
கோலாலம்பூர், அக்டோபர் -29 ,
அமெரிக்காவுடனான வணிக ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடாமல் இருந்திருந்தால், நமது நாடு அதிகமான வரி சுமையைச் சந்தித்திருக்கும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கூ சஃப்ருல் அப்துல் அசீஸ் (Tengku Zafrul Aziz) தெரிவித்தார்.
மலேசியா மற்றும் அமெரிக்கா இடையிலான வணிக ஒப்பந்தத்தின் மூலம், 25 சதவீதமாக இருந்த சுங்க வரி, 19 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு, 22 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 1,711 பொருட்கள் வரிவிலக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தம் தாமதமாகியிருந்தால், சுங்கவரி 50 அல்லது 100 சதவீதம் வரை உயர்ந்திருக்க கூடிய அபாய நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் இது நமது நாட்டின் ஏற்றுமதி, போட்டித்திறன் மற்றும் வேலைவாய்ப்புக்கு பெரும் பாதிப்பாக இருந்திருக்கும் என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் மலேசியாவின் வணிக நிலைத்தன்மையையும் முதலீட்டாளர் நம்பிக்கையையும் நிச்சயம் உயர்த்தும் என கூறப்பட்டது.
அமெரிக்காவுக்கு முக்கிய தொழில் மற்றும் வேளாண் பொருட்களில் மலேசியா சந்தை அணுகலை வழங்க ஒப்புக்கொண்டுள்ள, அதே வேளை மலேசிய பொருட்களுக்கு அமெரிக்கா 19 சதவீத வரியை அமல்படுத்தவுள்ளது.
.
மேலும் பூமிபுத்திராவின் உரிமைகள், அரசாங்க கொள்முதல் கொள்கைகள் மற்றும் தேசிய துறைகளில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்பதனையும் தெங்கூ சஃப்ருல் வலியுறுத்தினார்.



