Latestஉலகம்

அமெரிக்க உயர்நிலைப் பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி

ஜியோர்ஜியா, செப்டம்பர் -5, அமெரிக்காவின் ஜியோர்ஜியா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 14 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர்.

மேலும் 9 பேர் காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரணமடைந்தவர்களில் இருவர் மாணவர்கள், இருவர் ஆசிரியர்கள் ஆவர்.

சம்பவத்துக்கு முன் மாணவர்களைத் தனியாக ஒரு மூலைக்குக் கூட்டிச் சென்று அவன் அமரச் சொன்னதால், அது ஏதோ ஒரு பயிற்சி என்று தான் மற்றவர்கள் நினைத்திருக்கின்றனர்.

திடீரென சூடு பட்டு ஆசிரியர் சுருண்டு விழுந்த போது தான், இடமே கலவரமானது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படவுள்ளது.

பதின்ம வயதாக இருந்தாலும், குற்றத்தின் கடுமையைக் கருதி பெரியவனாக வகைப்படுத்தப்பட்டு அவன் மீது வழக்கு விசாரணை நடைபெறுமென அதிகாரிகள் கூறினர்.

பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவது எப்படி என்பது குறித்து இணையம் வாயிலாக சில வழிமுறைகளை (tips) கொடுத்ததன் பேரில் கடந்தாண்டே போலீசாரால் அவனும், அவானது தந்தையும் விசாரிக்கப்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!