Latestமலேசியா

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டோனல்ட் டிராம்ப் பெயர் -நெட்டன்யாஹூ பரிந்துரை

வாஷிங்டன், ஜூலை 8 – அமெரிக்க அதிபர் Donald Trump பெயரை அமைதிக்கான nobel பரிசுக்கு பரிந்துரைத்துள்ளதோடு இது தொடர்பாக nobel பரிசுக் குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தெரிவித்திருக்கிறார்.

நாம் பேசுவதுபோல் ஒரு நாடு, ஒரு வட்டாரம் என்று ஒன்றன் பின் ஒன்றாக அமைதியை அவர் உருவாக்குகிறார் என வெள்ளை மாளிகையில் டிரம்புடன் நடைபெற்ற இரவு விருந்தில் உரையாற்றியபோது Netanyahu கூறினார்.

பல ஆண்டுகாலமாக தனது ஆதரவாளர்கள் மற்றும் விசுவாசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளிடமிருந்து nobel பரிசுக்கான பரிந்துரைகளை டிரம்ப் பெற்று வருகிறார்.

மேலும் இந்த மதிப்புமிக்க விருதை தவறவிட்டதில் தனது எரிச்சலையும் அவர் மறைக்கவில்லை.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே மட்டுமின்றி , Serbia – Kosovo நெருக்கடியிலும் தாம் மேற்கொண்ட சமரச முயற்சிகளை Nobel பரிசு அமைதிக் குழு கண்காணிக்கத் தவறிவிட்டதாக குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான டோனல்ட் டிராம்ப் புகார் கூறியிருந்தார்.

Egypt மற்றும் Ethiopiaவுக்கிடையே அமைதியைப் பேணியதற்கும், இஸ்ரேலுக்கும் பல அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான உடன்பாட்டிற்கான சமரச உடன்பாடு காண்பதற்கு தாம் ஆற்றிய பங்கும் மதிக்கப்பட வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார்.

மேலும் Ukraine மற்றும் Gaza போரை முடிவு காண்பதற்கான பேச்சுக்களை விரைந்து மேற்கொள்ளப்போவதாக அதிபர் பதவிக்கான பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 5 மாதங்களுக்கு மேலாகிவிட்டபோதிலும் Ukraine மற்றும் Gaza போர் நெருக்கடிக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!