
கோலாலம்பூர், பிப்ரவரி-22-கோலாலம்பூரில் நிகழ்ந்த மோசடி சம்பவமொன்றில்
70 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர், pukau எனப்படும் வசிய மோசடியில் சிக்கி, 10,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகளை இழந்துள்ளார்.
அம்பாங்கில் உள்ள பேரங்காடியில், ஒரு தம்பதியரும் வெளிநாட்டு பெண்ணும் அம்மூதாட்டியை நெருங்கினர்.
3 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள லாட்டரி சீட்டு இருப்பதாகவும், அதை பெற உதவினால் பரிசு தருவதாகவும் கூறினர்.
ஆனால், அந்த வெளிநாட்டு பெண் வசிய முறையை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவரை ஏமாற்றியுள்ளார்.
காருக்குள் அழைத்துச் சென்று போலி காசோலையைக் காட்டி, 30,000 ரிங்கிட் முன்பணம் கேட்டுள்ளனர்; மூதாட்டியிடம் அவ்வளவு பணம் இல்லாததால் அவர் தங்கச் சங்கிலி மற்றும் தங்கக் காப்பை ஒப்படைத்தார்.
பின்னர் வங்கியில் காசோலையை மாற்றுவதற்காக மூதாட்டியை இறங்கி விட்டு விட்டு, மூவரும் ஓட்டம் பிடித்தனர்.
அம்பாங் ஜெயா போலீஸார் தற்போது அந்த 3 சந்தேக நபர்களையும் தேடி வருகின்றனர்.
இவ்வேளையில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருந்து, அந்நியர்களிடம் நகைகள் அல்லது பணத்தை ஒப்படைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



